திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு, 102 ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஹரிதாஸ் இவரது மனைவி சண்முகபிரியா (28) இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று சண்முகப்பிரியா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆம்பூர் அடுத்த உமராபாத் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் நடைபெறும் திருவிழாவிற்காக வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் வந்துள்ளார். ஆம்பூர் ராஜீவ்காந்தி சிலை அருகில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து தனது தாய் வீட்டிற்குச் சென்ற அவர் இன்று திருவிழாவிற்காக நகைகளை போட்டுக்கொள்ள டிராவல்ஸ் பேக்கை திறந்து பார்த்துள்ளார். அப்போது பேக்கில் வைத்திருந்த 5 1/4 சவரன் ஆரம் மற்றும் 2 1/4 சவரன் நெக்லஸ் உள்ளிட்ட ஏழரை சவரன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உமராபாத் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது உமராபாத் காவல் துறையினர் புகாரை வாங்க மறுத்து நீங்கள் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளனர்.