தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் சம்பவ இடத்திலேயே பலி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் ரயிலில் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விபத்தில் சிக்கிய நபர் யார் எந்த ஊரை சார்ந்தவர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டு வருகிறது.