வேலூர் கோட்டை மைதானத்தில் அதிமுகவின் இளைஞர் இளம் பெண்கள் பாசறை சார்பில் மண்டல மாநாடு நடைபெற்றது. அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் போது மேடைக்கு கீழே இருந்த தொண்டர் ஒருவர் திடீரென உயிருடன் உள்ள சேவல் ஒன்றை தூக்கி காட்டினார். எம்ஜிஆர் உயிரிழப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஜெயலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.