வாணியம்பாடி அருகே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியை 29 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி ஊராட்சி சங்கத்து வட்டம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியை 29 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி. எஸ். ஞானவேலன் தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க. தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. சி. வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் மு. அசோகன்,பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள் பெருமாள்,
ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரிமகேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் வி. ஜி. அன்பு, சி. சிவகுமார், குமார், தசரதன் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.