வாணியம்பாடியில் திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகர காவல் நிலையத்தை வணிகர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பூகடை பஜார் பகுதியில் திருட்டு நகை வாங்கியதாக கூறி நகை கடை உரிமையாளரை கர்நாடகா காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றதால் நகர காவல் நிலையத்தை வணிகர்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு சாந்தாபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த சதாம் மற்றும் பிரசாந்த் ஆகியோரை சாந்தாபுரா போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கர்நாடகா மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 13 தங்க செயின்களை வாணியம்பாடியில் உள்ள சாந்தி ஜுவல் பேலஸ் மற்றும் ஷர்மிளா நகை கடையில் விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கர்நாடகா போலீஸார் வாணியம்பாடியில் உள்ள ஷர்மிளா நகைக்கடை உரிமையாளர் பாபு என்பவரை கைது செய்து விசாரணைக்காக சாந்தாபுரா
காவல் காவல்நிலையத்திற்கு
அழைத்துச் சென்றனர்.