திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 32வது வார்டு ஜீவா நகர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் அப்பகுதியில் சாலை அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவழித்தனர்.
அந்த மனுவில் கடந்த 40 ஆண்டுகாலமாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலை வசதி இல்லாமல் அடிப்படை கட்டமைப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு சாலை அமைத்துத் தரவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.