
வாணியம்பாடி குளோபல் பள்ளி ஆண்டு விழா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் இயங்கி வரும் குளோபல் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஓ. அப்துல்லா பாஷா தலைமை வகித்தார். பள்ளி தலைவர் துஃபைல் அஹ்மத், பொதுச் செயலாளர் அலீம் பாஷா, விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியின் பொதுச் செயலாளர் சி. முஹம்மத் பர்வேஸ், விஸ்டம் பார்க் ஆரம்பப் பள்ளி தாளாளர் ஹெச் அப்துல் மாலிக் வசீம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை முதல்வர் ஷம்ஷாத். கே அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் ருதைனா ரஹ்மான் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சமரசம் மாத இதழின் ஆசிரியர் வி. எஸ். முஹம்மத் அமீன் மற்றும் கெளரவ விருந்தினராக விஸ்டம் பார்க் இன்டர்நேஷனல் பள்ளியின் துணை முதல்வர் ஆனந்த் கால்சன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்குர்ஆனை ஓதி முடித்த 5 ஆம் வகுப்பு படிக்கும் 7 மாணவர்களை கௌரவித்தனர், பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினர். தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி கூடியிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.