வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து உறங்கிய அலப்பறை செய்த மது போதை ஆசாமியால் பரபரப்பு
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் மது போதை ஆசாமி ஒருவர் துண்டை விரித்து போட்டு வீட்டில் உறங்குவதை போல் ரயில்வே தண்டவாளத்தில் படுத்து கொண்டிருந்துள்ளார் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் அவரை தண்டவாளத்தில் இருந்து வெளியேறும் படி கூறியும் வெளியேறாமல் அங்கேயே படுத்து கொண்டு வாழ்வா சாவா என பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்