கேரளா: திருவனந்தபுரம் வெஞ்சாரமூட்டில் 5 பேர் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் 3 காவல் நிலைய எல்லைகளில் நடந்துள்ளது. கொலையாளியான அஃபான் (23) முதலில் பாட்டியைக் கொன்றுவிட்டு 16 கிலோமீட்டர் பயணம் செய்து பெரியப்பா, பெரியம்மாவையும், அங்கிருந்து 8 கிலோமீட்டர் பயணம் செய்து தனது வீட்டுக்கு வந்து சகோதரனையும், காதலியையும் கொன்றுள்ளார். கொலை செய்யும் முன் காதலியை தனது வீட்டுக்கு வரச்சொல்லியுள்ளார். தாயையும் தாக்கிய நிலையில், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.