வாணியம்பாடி நகர திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் மற்றும் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்பு வழங்கும் விழா வார சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் வி. எஸ். சாரதி குமார் தலைமை வகித்தார். கே. கயாஸ் அஹமத், ம. விமலன், ஜி முஹம்மத் ஜான், கே. தென்னரசு, வி. பத்மாவதி, எம். குபேந்திரன், ஜெ. ரவி எஸ். அருள், கோவி. அசோகன், ஜெகன் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி தலைவர் எம். பி. சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் திருப்பத்தூர் ரஜினி, திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி, வாணியம்பாடி நகர மன்ற தலைவர் எஸ். உமா பாய் சிவாஜி கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்து கொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு எரிவாயு அடுப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: -
வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 26 வார்டுகள் திமுக மன்ற உறுப்பினர்கள், 2 தோழமை கட்சிகள், மீதுமுள்ள மன்ற உறுப்பினர்கள் திமுக ஆதரவுடன் சுயேட்சை மன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஆக வாணியம்பாடி திமுக கோட்டையாக உள்ளதை இதுவே சான்று.