நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கவிஞர் வைரமுத்து இன்று (பிப்., 25) நேரில் சந்தித்தார். இதுகுறித்த வைரமுத்துவின் எக்ஸ் பதிவில், அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம். அடுத்த படத்திற்கான
தலைப்பைச் சொன்னார். "நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்" என்றேன். டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன் என கூறியுள்ளார். முன்னதாக, திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.