போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளத்தை உயர்த்தவும், குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 ஆக உயர்த்தவும் தமிழக அரசுக்கு போலீஸ் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. 2022ல் முதல்வர் ஸ்டாலின் அமைத்த, 5வது போலீஸ் கமிஷன் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளது. போலீஸ் கான்ஸ்டபிள் சம்பளத்தை ரூ.21,700 - ரூ.69,100 ஆக நிர்ணயம் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.