ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அனைத்து பொருட்களையும் வழங்க உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், "பொது விநியோகத்திட்ட நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவான முறையில் சேவை செய்திட வேண்டும், விநியோகிக்கப்படும் பொருட்களின் எடை சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.