நில மோசடி வழக்கில் ஆர்ஜேடி தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது லாலு பிரசாத் யாதவ் வேலை வாங்கித் தருவதாக கூறி நில மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் தற்போது சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணிக்கு ஈடாக, நிலம் மற்றும் சொத்துப் பரிமாற்றங்களை நடத்தியதாக லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.