இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திமுகவினர் பொது இடங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்து வருகின்றனர். இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறுகையில், "ரூபாய் நோட்டில் உள்ள இந்தி மொழியை முடிந்தால் அழியுங்களேன், மானம் கெட்டவர்கள். திமுகவை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளியில் உள்ள இந்தி, சமஸ்கிருதத்தை போய் அழியுங்கள்” என காட்டமாக தெரிவித்தார்.