தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலேசியாவிற்கு கல்விச்சுற்றுலா சென்றுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்கள், தமிழ் அடையாளங்களை தாங்கி நிற்கும் சின்னங்களைப் பார்வையிட வேண்டும் என் நோக்கில் பயணத்தை திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மெர்டேக்கா சதுக்கம் என அழைக்கப்படக்கூடிய சுதந்திர சதுக்கத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.