பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை ரஞ்சனா நாச்சியார் அறிவித்துள்ளார். "தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணிதான் தேசிய இயக்கத்தில் இணைந்து கொண்டேன். ஆனால் தாயகம் வேறு, தமிழகம் வேறு என்ற மாற்றாந்தாய் போக்கு என்னை இன்னும் இங்கு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது. மும்மொழி கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்பை ஏற்க முடியவில்லை. இனி புதிய பாதையில் என் எழுச்சி பயணம் இருக்கும்" என்றார்.