ராணிப்பேட்டை மாவட்டத்தில் 66.3 மி. மீ மழை பதிவு!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதாவது பாலாறு அணைக்கட்டு பகுதியில் 14.8 மில்லி மீட்டர், ஆற்காடு பகுதியில் 20. 8 மில்லி மீட்டர், பனப்பாக்கம் தொகுதியில் 6. 8 மில்லி மீட்டர், வாலாஜா பகுதியில் 13.5 மில்லி மீட்டர், அம்மூரில் இரண்டு மில்லி மீட்டர், ராணிப்பேட்டையில் 5. 4 மில்லி மீட்டர் என ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 66.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் சராசரி அளவு 6.03 மில்லி மீட்டர் மழையாகும்.