சோழிங்கர் - Sozhingar

நல்லூர்பேட்டை கெங்கையம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா

நல்லூர்பேட்டை கெங்கையம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா

பனப்பாக்கம் அடுத்த நல்லூர்பேட்டை பகுதியில் எல்லையம்மன் கோவில் கோவில் வளாகத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் வைகாசி மாத திருவிழா கடந்த 28-ந் தேதி கெங்கையம்மனுக்கு காப்புக்கட்டி விழா தொடங்கியது. தொடர்ந்து விழாவின் இறுதி நாளான நேற்று காலை கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் மாட வீதிகளில் நடைபெற்றது. பின்னர் பகல் 1 மணிக்கு கூழ் வார்த்தலும், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.  அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த கெங்கையம்மன் சிரசு ஊர்வலத்தின் போது வழிநெடுக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நெமிலி, மேலபுலம், திருமால்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా