ஆற்காடு: சிகிச்சைக்கு சென்றவருக்கு மருந்து வழங்கிய காவலாளி!

57பார்த்தது
ஆற்காடு: சிகிச்சைக்கு சென்றவருக்கு மருந்து வழங்கிய காவலாளி!
ஆற்காடு அடுத்த அயிலம் பகுதியை சேர்ந்தவர் சாது (வயது 40). இவரது மகள் ஜஸ்டின(15). பள்ளி சிறுமியான இவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை அருகாமையில் அருங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மற்றும் நர்ஸ் இல்லாததால், அங்கு பணியில் இருந்த காவலாளி சிறுமிக்கு மருந்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், காவலாளியிடம் டாக்டர்கள், நர்ஸ் இல்லையா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மருந்து கொடுத்து விட்டேனே. ஏன் இதை பெரிது படுத்துகிறீர்கள் என கூறி உள்ளார். மேலும் காவலாளி நர்ஸ் ஒருவருக்கு போன் செய்து சிறுமியின் உறவினரிடம் கொடுத்துள்ளார். அதில் பேசிய நர்ஸ், ஏற்கனவே பணியில் இருந்தவர்கள் இப்போதுதான் பணிமுடித்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் நான் வந்துவிடுவேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் சுமார் 1 மணி நேரம் ஆகியும் யாரும் வராததால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

டேக்ஸ் :