சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் பல் சிகிச்சையால் மாரடைப்பு ஏற்பட்டு ஹுவாங் என்பவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. ஹுவாங் என்பவருக்கு ஒரே நாளில் 23 பற்களை பிடுங்கிவிட்டு, 12 பற்களை மீண்டும் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சை அளிக்கப்பட்டு 13 நாட்களில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். ஒரு பல்லை பொருத்துவதற்கு ரூ.17,000 வரை அவரது குடும்பத்தினர் செலவிட்டுள்ளனர்.