கடைகளை காலிசெய்ய 3 நாட்கள் அவகாசம்

56பார்த்தது
கடைகளை காலிசெய்ய 3 நாட்கள் அவகாசம்
சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து நகராட்சிக்கு உண்டான கட்டமைப்பு மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒன்றாக சோளிங்கர் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக ரூ. 4 கோடி 66லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் இயங்கி வருகிறது. வியாபாரிகள் கடைகளை குத்தகை எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர். பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் காரணமாக பழைய கட்டிடங்கள், கடைகளை அகற்ற உள்ளனர். இதற்காக அளவீடுகள் செய்யப்பட்டது. விரைவில் கட்டிடங்களை அகற்றி விட்டு பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்து நிலைய கடைகாரர்கள், கடைகளை காலிசெய்ய ஒரு மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால் கடையை காலி செய்யாமல் உள்ளனர். பணிகள் தொடங்க உள்ளதால் முதலில் 15 நாள் அவகாசம் வழங்கியும். பின்னர் 7 நாட்கள் அவகாசம் வழங்கியும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வாங்க வியாபாரிகள் மறுத்ததால் கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இறுதியாக 3 நாள் அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கி பேருந்து நிலைய விரிவாக்க பணி தொடங்கப்படும்.

அதற்குள் வியாபாரிகள் கடையை காலி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்து. இந்த நிலையில் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கான அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி