ராணிப்பேட்டை டவுன் - Ranipet Town

வேலூர்: குப்பைகளுக்கு மத்தியில் அங்கன்வாடி மையம் - பரபரப்பு காட்சி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சந்தைப்பேட்டை பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சந்தைப்பேட்டை அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில், அதே பகுதியில் சமுதாய கூட வளாகத்தில் உள்ள ஒரு அறைக்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டுள்ளது. அதே சமுதாயக்கூட வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ளதால், அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து குழந்தைகள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் குடியாத்தம் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து குடியாத்தம் நகராட்சி ஆணையரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் ஒரு இடத்தில் சேர்க்கப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படும். ஆனால் ஊழியர்கள் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் உள்ளனர். குப்பைகளை அகற்ற உத்தரவிட்டுள்ளேன். பணிகள் நடந்து வருகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், "என்றார்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా