பழிக்கு பழியாக கொலை - தந்தை, மகன் கைது!
அரக்கோணத்தை அடுத்த கிழவனம் கிரா எத்திராஜ் மத்தை சேர்ந்த பாஸ்கர், இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரன் (45) என்பவருக்கும் இடையே கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட விவசயநிலம் தொடர்பான தகராறில், பாஸ்கரனை, சந்திரன் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற சந்திரன் குடும்பத்தினருடன் சோளிங்கரை அடுத்த ஜனேரி கிராமத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் சந்திரன் நேற்று முன்தி சுப்பிரமணினம் உறவினரிடம் பணம் வாங்குவதற்காக கிழவனம் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது சந்திரனுக்கும், கொலை செய்யப்பட்ட பாஸ்கரின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாஸ்கரின் தம்பி எத்திராஜ் (42), தந்தை சுப்பிரமணி (70), பாஸ்கரின் மனைவி கீதா (40), கீதாவின் அண்ணன் சரவணன் (48), 18 வயது வாலிபர் ஒருவர் ஆகிய 5 பேரும் சேர்ந்து சந்திரனை வெட்டியுள்ளனர். அதில் படுகாயமடைந்த சந்திரனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார், எத்திராஜ் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் எத்திராஜ், சுப்பிரமணி ஆகிய 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.