ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

82பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு சொந்தமான ஷடரான்ய நட்சத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாதத்தில் வரும் திருமஞ்சனத்தை முன்னிட்டு உற்சவர் சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமானுக்கு பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பல்வேறு வகையான பழசாறுகள், பூ மலர்கள், உள்ளிட்ட 50 வகையிலான வாசனை திரவியங்களை கொண்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கியவாறு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சோட உபச்சாரங்கள் செய்யப்பட்டு பல்வேறு வகையான பஞ்சலோக மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற நடராஜர் சிறப்பு அபிஷேக நிகழ்வில் வன்னிவேடு கிராம சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி