அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் இயங்கி வருகிறது. இங்கு கட்டிட இடிபாடுகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் 11 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது பொதுமக்களை பார்த்தால் மோப்ப நாய்களுக்கு எந்த வித பயமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியாக இருந்தது.