வேலூர் மாநகரில் மாலை வேலையில் கனமழை பெய்தது. அதாவது சத்துவாச்சாரி , வள்ளலார், வேலூர் ஆட்சியர் அலுவலகம், கிரீன் சர்க்கிள், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீருடன் மழை நீரும் கலந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.