வாலாஜா அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!

77பார்த்தது
வாலாஜா அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!
வாலாஜா அருகே தென்கடப்பந்தாங்கல் கிராமம் ஆஸ்பிடல் தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). சம்பவத்தன்று தெய்வசிகாமணி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அதனை மகேஸ்வரி கண்டித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மகேஸ்வரி வீட்டின் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வாலாஜா போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி