கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்!

64பார்த்தது
தமிழ்நாடு, சமூக நலத்துறையின் சார்பில், வீரதீர செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்கு 2024ம் ஆண்டின் துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இந்த விருதை விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரம் குறிப்புகள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) துணிவு மற்றும் சாகசச்செயல் புரிந்தமைக்கான நாள் மற்றும் தொடர்புடைய புகைப்படத்துடன் தமிழக அரசின் விருதுகள் இணைய தளத்தில் (https: //awards. tn. gov. in) 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்து மற்றும் கருத்துருவினை மாவட்டசமூக நல அலுவலகம், 4-வது தளம், "சி'' பிளாக், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், ராணிப்பேட்டை என்ற முகவரியில் சமர்பிக்கலாம் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி