போளூர் - Polur

போளூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

போளூா் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை ஆட்சியா் குமரன் தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அமுல் முன்னிலை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி வரவேற்றாா். கூட்டத்தில், விவசாயிகள் பேசும்போது செங்குணம், ஆத்தூவாம்பாடி ஆகிய கிராமங்களில் குரங்குகள் தொல்லை அதிகளவு உள்ளது. இதைக் கட்டுபடுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். கஸ்தம்பாடி கிராமத்தில் இருளா் குடியிருப்பு பகுதியில் தெரு மின் விளக்கு வசதி இல்லை. அனைத்துத் துறை அலுவலா்களும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினா். மேலும் கால்நடை மருத்துவா் திருஹரிகரன் பேசும்போது, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, ஏழைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கோழிக் குஞ்சுகள் வழங்கப்படும். ரூ. 4200 மதிப்புடைய கோழிக் குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் முன்பணமாக ரூ. 1600 செலுத்தி அக். 6-ஆம் தேதிக்குள் 40 கோழிக் குஞ்சுகளை கால்நடைத் துறையில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

வீடியோஸ்


திருவண்ணாமலை