
தி.மலை: குளத்தை தூய்மைப்படுத்தும் தன்னார்வலர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பூங்காவின் குளத்தை வந்தவாசி அன்பால் அறம் செய்வோம் என்ற சமூக சேவை தன் ஆர்வக் குழு தூய்மைப்படுத்தும் பணியில் இன்று ஈடுபட்டனர். குளத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் அகற்றியது குறிப்பிடத்தக்கது.