குழந்தைகளின் சிறுநீர், நீண்ட நேரம் டயப்பரிலேயே இருப்பதால், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள், குழந்தைகளுக்கு வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். இவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். டயப்பரை 4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும். குழந்தைகளுக்கு 2 வயது வரை மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம். டாய்லெட்களைப் பயன்படுத்த குழந்தைகளை 2 வயதில் இருந்தே பழக்கபடுத்துவது சிறந்தது. ஒருநாள் முழுவதும் டயப்பர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.