தமிழகத்தின் மூன்றாவது துணை முதலமைச்சராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவி ஏற்றார். அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார். மேலும் அமைச்சர்கள் பதவியேற்றனர்.
அந்நிகழ்வை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பணிமனை அருகே தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அமைப்பு செயலாளர் ராஜரத்தினம் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். உடன் பலர் கலந்து கொண்டனர்.