சமூக நீதி என பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைப்பது திமுகவின் தொடர் கதையாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பட்டியலின மக்களை திமுக கிள்ளுக்கீரையாக நடத்தும் அவலநிலை கண்டிக்கத்தக்கது” தன்னை நாற்காலியில் அமர விடாமல், சாதி ரீதியாக சிலர் திட்டி அவமரியாதை செய்வதாக விழுப்புரம் ஆனாங்கூர் ஊராட்சித் தலைவர் சங்கீதா தர்ணா செய்ததை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.