திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இன்று(அக்.01) வட்டார அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் துணை ஆட்சியர் தீப சித்ரா தலைமையில் நடைபெற்றது. உடன் சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலா, வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ், சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.