படவேட்டில் ரூ 1. 20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம்.

75பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அ. கோ. படவேடு கிராமத்தில் ரூபாய் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு ஆகியோர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினர்.



போளூர் அடுத்த அ. கோ. படவேடு கிராமத்தில் ரூபாய் 1. 20 கோடி மதிப்பீடு புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு நல திட்ட உதவிகளை அமைச்சர்கள் மா. சுப்பிரமணி மற்றும் எ. வ. வேலு ஆகியோர் இணைந்து வழங்கினர்.

இந்நிகழ்வில் உடன் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி