திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு ராஜாஜி தெருவில் பழமை வாய்ந்த வரசித்தி விநாயகர் ஆலயம் சிதிலம் அடைந்த நிலையில் இருந்து வந்தது இதனை அப்பகுதி மக்கள் புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இப்பகுதி மக்கள் முடிவு செய்து வரும் வேளையில் இப்பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் நீதிமன்றத்தில் வரசித்தி விநாயகர் கோயில் இருக்கும் இடம் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் செல்வராஜிக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியது இதனை தொடர்ந்து நாளை 25ஆம் தேதி கோயிலை இடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து தகவல் அறிந்த போளூர் டிஎஸ்பி மனோகரன் சேத்துப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜா ராம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் பொதுமக்கள் இது குறித்து ஆர்டிஓ நேரடியாக வந்து ஆய்வு செய்து கோயில் தரப்பினருக்கு ஆக்கிரமிப்பை தடுத்து கோயில் இடிப்பதற்கு தடைவிதித்து உத்தரவு வழங்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளனர்.