திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வெயில் தாக்கம் அதிகரித்து இருந்த நிலையில் திடீரென இரவில் குளிர்ந்த சூழல் உருவாகி 1 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் இடியுடன் கூடிய கன மழை பெய்தது.
இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர் போளூரில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு 48. 2 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.