திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்காபுரம் பகுதியில் சேத்துப்பட்டு போலீஸார் நேற்று (அக்.,1) ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது செய்யாறு ஆற்றுப்படுகையிலிருந்து மணலுடன் வந்த மாட்டுவண்டியை ஓட்டி வந்தவர் போலீசாரை பார்த்ததும் அதனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பிவிட்டார். இதனை அடுத்து மணலுடன் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.