தமிழக அரசால் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக 'நீட்ஸ்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 12ம் வக்குப்பு, பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, ஐ.டி.ஐ., தொழிற்கல்வி படித்தவர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். இதில், ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை வங்கி கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். அதிகபட்சம் ரூ.75 லட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு https://www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.