திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெலாசூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நேற்று(செப்.21) புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதல் சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து கும்மியடித்து நடனம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.