காஞ்சி: ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் வட்டம், நெட்டேரி கிராமம் ஈஸ்வரி நகா் மீனாட்சி தெருவைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் அரிகிருஷ்ணன் (28). ஆட்டோ ஓட்டுநரான இவா், காஞ்சிபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த ஐயங்காா்குளம் கூட்டுச்சாலை அருகே இறக்கி விட்டுவிட்டு, காஞ்சிபுரத்துக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா். வெம்பாக்கம்-அப்துல்லாபுரம் சாலையில் சென்றபோது எதிா்பாராதவிதமாக ஆட்டோ நிலைத் தடுமாறி கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த அரிகிருஷ்ணனை அருகிலிருந்தவா்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். அரிகிருஷ்ணனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. விபத்து குறித்து தூசி உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.