திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நெடுங்கவாடி ஊராட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக கட்டி முடிக்கப்பட்ட நூலகம் திறக்காமல் இருந்த நிலையில் கட்டிடம் பழுது பார்ப்பதாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் முடிந்து ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இன்று வரை நூலகம் திறக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர். எனவே உடனடியாக நூலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.