செங்கத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்.....

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தனியார் மண்டபத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலைஞர் நூற்றாண்டு விழா, பவள விழா, கட்சிப் பணிகள் குறித்த முப்பெரும் விழா நடைபெற்றது மேலும் திமுக வெற்றி குறித்தும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவது குறித்தான ஆலோசனை கூட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அவை தலைவர் கண்ணன் மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் மேலும் செங்கம் நகரச் செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்
செங்கம் கிழக்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம், மத்திய ஒன்றியம். நகரம் உள்பட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட திமுக கிளை கழகம் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி