கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கிரி நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்.