தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் திறப்பு

62பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகரம்பள்ளிப்பட்டு - தொண்டாமானூர் ஆகிய பகுதிகளுக்கு குறுக்கே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை அமைச்சர் எ. வ. வேலு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தண்டராம்பட்டு ஒன்றியம் அகரம்பள்ளிப்பட்டு - தொண்டாமானூர் ஆகிய பகுதிகளுக்கு குறுக்கே உள்ள தென்பெண்ணை ஆற்றில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக நபார்டு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சுமார் 40 ஆண்டு காலமாக பாலம் இல்லாமல் அவதி அடைந்து வந்த பொதுமக்களின் தேவைகளை திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றி உள்ளதாக பொது மக்களிடம் பேசினார்.
இதனைத் தொடர்ந்து தண்டராம்பட்டு - தொண்டாமானூர் முதல் பேருந்து சேவையை அமைச்சர் எ. வ. வேலு சட்டபேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
இந்நிகழ்ச்சியில்சட்டமன்ற உறுப்பினர்கள்
மு. பெ. கிரி, சரவணன், பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, நெடுஞ்சாலைத்துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி , கோட்ட பொறியாளர் ஞானவேல் , மற்றும் உதவி கோட்ட பொறியாளர் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி