செங்கம் அருகே காணாமல் போன பெண்ணை கண்டுபிடித்து தர உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த இறையூர் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி வயது 44, கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திருவண்ணாமலைக்கு கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் உறவினர்கள், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கடந்த ஒரு வாரமாக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால். காவல்துறையை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி காணாமல் போன காமாட்சியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது
இதனை அடுத்து பாச்சல் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் சாலை மறியல் கைவிட்டு களைந்து சென்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.