செங்கம் - Chengam

வீடியோஸ்


திருவண்ணாமலை
தி.மலை: போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
Mar 19, 2025, 04:03 IST/வந்தவாசி
வந்தவாசி

தி.மலை: போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Mar 19, 2025, 04:03 IST
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் பகுதியில் உள்ள பெட்டி கடையில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் தனிப்படை போலீசார் அந்த கடையில் சென்று சோதனை செய்த போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒரு கிலோ அளவிலான குட்கா போதைப் பொருள் பாக்கெட் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் கடை உரிமையாளர் விஜயகுமார்(32) விற்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் விஜயகுமாரிடம் விசாரித்த போது, சேத்துப்பட்டு பகுதியில் சமத்துவபுரத்தில் உள்ள மன்சூர்அலி(52) என்பவரிடம் வாங்கி வருவதாக தெரிவித்தார்.  பின்னர் போலீசார் அந்த பகுதிக்கு சென்று மன்சூர் அலி கடையை சோதனை செய்த போது அங்கு குட்கா, கூல்லிப், பான்மசாலா உள்ளிட்ட சுமார் 20 கிலோ அளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்று வந்த விஜயகுமார்(32), மன்சூர் அலி(52) இருவர் மீதும் பெரணமல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.