புதியு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை

68பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சி சின்ன காயம்பட்டு மக்கள் தங்கள் பகுதிக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி க்கு கோரிக்கை வைத்தனர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15 வது நிதியில் இருந்து மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அமைக்க ரூபாய் 15 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
நிகழ்ச்சிகள் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன் செந்தில்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார், அவைத் தலைவர் வீரபத்திரன் ஊராட்சி மன்ற தலைவர் துணைவன், திமுக நிர்வாகிகள் காயம்பட்டு செந்தில்குமார், கலைச்செல்வன், பழக்கடை பாலு, அறிவழகன் சதீஷ்குமார், ஏழுமலை தோழமைக் கட்சி நிர்வாகி ஏழுமலை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக கிளைக் கழக செயலாளர் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி