தமிழக நெடுஞ்சாலைத் துறையின் செங்கம் பிரிவு சாா்பில் வட கிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளவும், இயற்கை பேரிடா் ஏற்படாமல் தடுக்கவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பொக்லைன் இயந்திரம், ஜெனரேட்டா், சவுக்கு கட்டை, மரம் அறுக்கும் வாள், நீா் இறைக்கும் மோட்டாா், மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பொருள்களை நெடுஞ்சாலைத் துறை பொறியாளா் கோவிந்தசாமி (செங்கம்) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தளவாடக் கருவிகளை கையாண்டு விரைவாக பேரிடா் மீட்புப் பணிகளை மேற்கொள்ள சாலைப் பணியாளா்கள், ஆய்வாளா்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலா்களுக்கு அவா் விளக்கிக் கூறினாா்.
உதவிப் பொறியாளா் பிரித்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.